உள்ளும்
புறமும் என்னை
சுத்தம்
செய்து உன்னத ஆவியை ஊற்றிடுமே
உள்ளம்
நிரம்பி வழிந்திட வல்ல அபிஷேகமே தந்திடுமே
ஊற்றும்
தேவா, ஊற்றும் தேவா
உன்னத
ஆவியை ஊற்றும்
தேவா
தாரும் தேவா தாரும்
தேவா
அக்கினி அபிஷேகம் தாரும் தேவா
1.ஜெபத்தின்
ஆவியால் என்னையும் நிரப்பிடும்
ஜெயமுள்ள
வாழ்க்கையை தினமும் வாழ்ந்திட - 2
பொல்லாத
வல்லமைகளை தேவா எதிர்த்து வென்றிடவே
சொல்லாத
அற்புதங்கள் எங்கள்
உள்ளத்தில்
நடத்திடுமே - ஊற்றும்
2.பெலத்தின்
ஆவியால் என்னையும் நிரப்பிடும்
பெலவீனம்
நீங்கி சுகமாய் வாழ்ந்திட
ஆவியின்
பெலத்தோடே உந்தன் பாதையில் ஓடிடவே
ஆத்தும
நேசரே உம் மார்பில் அன்புடன்
சாய்ந்திடவே
3.ஞானத்தின்
ஆவியால் பேதையை நிரப்பிடும்
வாழ்க்கையில்
உம்மையே உயர்த்திக் காட்டவே - 2
என்றும்
உம்முடனே மோட்சத்தில் மகிழ்ந்து பாடிடவே
இன்றே
வந்திடுமே என்னை சீயோனில் சேர்த்திடவே!