இரட்டிப்பான
நன்மைகள் தந்திட
இயேசு
வாக்களித்தாரே
முன்
மாரிமேல் பின் மாறி மழையே
உன்னதத்திநின்று
வந்திறங்குதே
1.பெலத்தின்
மேலே மா பெலனே
புது
பெலன் நாம் பெற்றிட
சால்வைதனை
எலிசா அடைந்தாற் போல்
சோர்வின்றி
பெலன் என்றும் நாடுவோம் – இரட்டிப்
2.கிருபையின்
மேல் மா கிருபை
கர்த்தரிடம்
நாம் பெற்றிட
ஸ்திரீகளுக்குள்
மரியாள் பெற்ற பாக்யம்
ஸ்தோத்திரம்
பாடி என்றும் தேடுவோம் – இரட்டிப்
3.ஜெயத்தின்
மேலே மா ஜெயமே
ஜெய
தொனியாய்ப் பெற்றிட
போர்
முனையில் சிறு தாவீது போல
போர்
வீரராக என்றும் ஜெபிப்போம் – இரட்டிப்
4.நம்பிக்கையின்
மேல் நம்பிக்கை
நல்
விசுவாசம் பெற்றிட
ஆதி
அப்போஸ்தலர்கள் காலம் நடந்த
அற்புதங்கள்
நாம் என்றும் காணுவோம் – இரட்டிப்
5.பரிசுத்தம்
மேல் பரிசுத்தம்
பங்கமில்லாமல்
பெற்றிட
நீதியின்
சூரியன் ஏசுவுடனே
நீதி
அணிந்து என்றும் ஆளுவோம் – இரட்டிப்
6.மகிமையின்
மேல் மகிமை
மறுரூபம்
நாம் பெற்றிட
கண்ணிமை
நேரத்திலே பறந்தேகி
கர்த்தருடன்
நாம் என்றும் வாழுவோம் – இரட்டிப்