தேவனே
இயேசுவே தேற்றரவாளனே
உமக்கே
என்றும் ஸ்தோத்திரம்
துதிகள்
நிறைந்த ஸ்தோத்திரம்
1.தாழ்மை
உள்ளவர்க்கு கிருபையை அள்ளித் தருபவரே
தாழ்மையாக
வந்து புவியில் நன்மை செய்தவரே
தானாகவே
எனைத் தேடியே தஞ்சம் அளித்தவரே
தன்னைப்
போலவே என்னை மாற்றவே ஜீவன்
தந்தவரே
2.நன்மைக்காக
மட்டும் எல்லாம் அனுமதிப்பவரே
நான்
என்னும் சுயத்தை என்றும் உருவழிப்பவரே
நானே
வழியும் சத்தியமும் ஜீவன் என்றவரே
நல்ல
மேய்ப்பனாய் நாளும் என்னுடன் தங்கியிருப்பவரே
3.உலகத்தின்
மகிமை தேவன் முன் குப்பை
என்றவரே
உலகத்தாரல்ல
என்று பிரித்தெடுத்தவரே
உம்
சாயலாய் மாறிடவே உதவி செய்பவரே
உள்ளத்திலே
மாம்சத் திரையை விலக்கி எடுப்பவரே