மரித்த
இயேசு உயிர்த்துவிட்டார் அல்லேலூயா
மன்னன்
இயேசு ஜீவிக்கிறார் அல்லேலூயயா
அல்லேலூயா
ஜீவிக்கிறார்
அல்லேலூயா
அல்லேலூயா ஜீவிக்கிறார்
1.மரணம்
அவரைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
கல்லறையோ
கட்டிக்காக்க முடியவில்லையே
யூத
சிங்கம் கிறிஸ்து ராஜா வெற்றி பெற்றாரே
சோர்ந்து
போன மகனே நீ துள்ளிப்
பாடிடு
2.அஞ்சாதே
முதலும் முடிவும் இயேசுதானே
இறந்தாலும்
எந்நாளும் வாழ்கின்றவர்
நாவினாலே
அறிக்கை செய்து மீட்படைவோம்
நாள்தோறும்
புதுபெலனால் நிரம்பிடுவோம்
3.கண்ணீரோடு
மரியாள் போல அவரைத் தேடிடுவோம்
கர்த்தர்
இயேசு நமக்கு இன்றும் காட்சி
தருவார்
கனிவோடு
பெயர் சொல்லி அழைத்திடுவார்
கலக்கமின்றி
காலமெல்லாம் சாட்சி பகர்வோம்
4.எம்மாவூர்
சீடரோடு நடந்துசென்றார்
இறைவார்த்தை
போதித்து ஆறுதல் தந்தார்
அப்பமிட்டு
கண்களையே திறந்து வைத்தார்
அந்த
இயேசு நம்மோடு நடக்கின்றார்