நேசமுடன்
போற்றுவேன்! (2)
1.வஞ்சம்
நிறைந்ததென் நெஞ்சம்
என்றறிவாய்
வஞ்சக உலகின் வலைதனில்
வீழ்ந்தேன்
தஞ்சமென்று நாடினேன் நெஞ்சார மன்னித்தாய் (2)
அஞ்சி
நின்ற என்னை மைந்தனாய் ஏற்றாய்
2.இன்னல்
தரும் நோய்கள் என்னை வருத்திட
அன்னையின்
உருவாய் அணைத்தாய்
உன்
மார்பில் அன்பு கரங்கள் கொண்டு
அழிவினின்றென்னை மீட்டாய்
(2)
நன்றியால் என் உள்ளம் நெகிழ்ந்திடச்
செய்திட்டாய்
3.மதுரமே
நின் நாமம்! அமுதன் நின்
வாய்மொழி
மதுரமே நீ பொழியும் ஆவியின்
நன் மழை
மதுரமே
விண்ணுலகின் விந்தைக் தரிசனம் (2)
மதுரமே
நின் முக இன்பப் பிரசன்னம்!