ஏதுக்கழுகிறாய்
நீ - ஏழை மாது நான்
என்ன செய்வேன்
கூதலடிக்கிறதோ பாலா குளிரும் பொறுக்கலையோ?
2.தந்தைக்கு
தச்சு வேலை - பாலா தாயும்
எளியவளே
இந்தமா
சங்கடத்தில் பாலா என்ன பெருமையுண்டு!
3.மூடத்
துணியில்லையோ - இந்த மாடடையுங்
கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா கலங்கித் தவிக்கிறாயோ?
4.வான்தூதர்
தாலாட்டைக் கேட்ட மாமணியே உனக்கு
நான்
பாடும் தாலாட்டு கேட்க நன்றாயிருக்கலையோ?
5.ஜோதியே
சுந்தரமே மனுஜாதியை மீட்க வந்த
நாதனே
நீர் அழுதால் இந்த நாடும்
சிரியாதோ?
6.இல்லாத
ஏழைகட்கு இன்பம் எல்லாம் அளிக்க
வந்த
செல்வமே நீரழுதால் - ஏழை மாது நான்
என்ன செய்வேன்?
7.அன்பற்றோர்
தேசத்தில் - அழுதால் யாரும் உருகுவாரோ
இன்பமே
ரஞ்சிதமே -மகனே ஏங்கி அழாய்
அரசே!