ஏழை
என்னை கைவிடாமல்
நேசர்
என்றும் நடத்திடுவார்
1.அக்கரை
நான் சேரும் வரை
அவர்
தாங்குவார்
உலகில்
ஆபத்திலும் துக்கத்திலும் (2)
அவர்
தான் எனக்கருகில்
2.மரணத்தின்
பள்ளத்தாக்கிலும்
கண்ணீரின்
வேளையிலும்
கைவிடாமல்
கர்த்தர் என்னை (2)
கரங்களில்
தாங்கிடுவார்
3.புயல்
காற்றும் அலைகளும்
என்
படகை அலைக்கழிக்கும்
நேரமெல்லாம்
கூட உண்டு (2)
நேசர்
என்றும் வல்லவராய்
4.விண்ணில்
என்னை சேர்த்திடவே
வருவேன்
என்றுரைத்த
நேசர்
வந்திடுவார் சேர்த்திடுவார் (2)
ஈந்திடுவார்
பிரதிபலன்கள்