வாராவினைவந்தாலும்சோராதே
மனமே
வல்ல
கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே
1.அலகைசதித்துன்மீதுவலை
வீசினாலும்
அஞ்சாதே
ஏசுபரன் தஞ்சம் விடாதே
2.உலகம்
எதிர்த்துனக்கு மலைவு செய்தாலும்
உறுதி
விட்டயராதே நெறி தவறாதே
3.தேகம்
மோகம் மிஞ்சி வேகம் கொண்டாலும்
திடமனதாயிருந்
தடல் புரிவாயே
4.பெற்ற
பிதாப்போல் உன்குற்றம் எண்ணாரே
பிள்ளை
ஆகில் அவர் தள்ளிவிடாரே
5.தன்
உயிர் ஈந்திட்ட உன் இயேசுநாதர்
தள்ளுவாரோஅன்புகொள்ளவர்மீதே
6.மரணம்
உறுகின்ற தருணம் வந்தாலும்
மருளவிழாதே
நல் அருளை விடாதே
7.வையகமே
உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை
முற்றும் தான் அடைவாயே!