போராட்டம்
நிறைந்த உலகத்திலே
பெற்றுக்
கொள்ளத்தக்கதாய்
நாம்
ஓடுவோம்
1.ஓடுபவர்
எல்லாம் ஓடுவர்
ஒருவனே
பெறுவான் பந்தயப் பொருளை
2.நிச்சயமில்லாது
ஓடாமல் நாம்
முழு
நிச்சயமாய் ஓடிடுவோம்
3.அழிவுள்ள
கிரீடத்திற்காய் அல்ல
அழியாத
கிரீடம் பெற ஓடிடுவோம்
4.அடைந்தாயிற்றென்று
எண்ணாமல் - நாம்
இலக்கைநோக்கி
தொடர்ந்திடுவோம்
5.நீதியின்
கிரீடத்தைப் பெறவே நாம்
விசுவாசத்தைக்
காத்துக்கொள்வோம்
6.முன்னோடியானவர்
இயேசுவின்பின்
மகிமை
நோக்கி ஓடிடுவோம்
7.பாரமான
பாவங்கள் எல்லாம்
தள்ளிவிட்டே
நாம் ஓடிடுவோம்
8.பரிசுத்தர்களுக்கென்று
ஒப்புக்கொடுத்த
விசுவாசத்திற்காய்
நாம் போராடுவோம்