1.சிருஷ்டிப்பின்
ஆதி காரணரே
ஜீவனின்
அதிபதியானவரே
நேற்றும்
இன்றும் என்றும் மாறாதவரே
நிலைவரமானவரே
2.ஒருமனதோடே
தேடுவோரை உண்மையாய்
ஏற்றுக்
கொள்பவரே
ஊக்கமாய்
ஜெபிப்போர்க்குள்ள
பலனை
உடனடி அளிப்பவரே
3.தாகமுள்ளோருக்கு
ஜீவ நீரை
தாராளமாயீவேன்
என்றவரே
ஆவியாம் ஜீவ தண்ணீரை
எமக்கு
மேவியே இன்று ஈவீரே
4.பாவிக்கு
பாதை காண்பிக்கவே
பாரினில்
ஈவாய்
தோன்றினீரே
பாதகன் போல
பாரக் குருசில் தேவனே
தொங்கினீரே