உன்னதமானவர்
சர்வ வல்லவர்
நிகரில்லாதவர்
நித்தியமானவர் - 2
சாவை
வென்று உயிர்த்தவர் - முழு
அகிலம்
வணங்கும் ஆண்டவர்
என்
நினைவாய் இருப்பவர் இயேசுவே ஆண்டவர் - 2
பாடு
! பாடு! கொண்டாடு! கர்த்தரின் உத்தமம் மாபெரிது
மகிழ்ந்து
பாடு! கொண்டாடு! தலைமுறைதோறும்
தொடருமது
அந்தமில்லாமல் நிலைக்குமது - 2
1.ஆபிரகாமை
பெயர் சொல்லி அழைத்தவர்
உண்மையுள்ளவர்
ஊர்விட்டு வாவெனக்
கூட்டிச்
சென்றவர் உத்தமம் அணிந்தவர்
காடை,
மன்னா! மதுரமான நீர்! தந்தவர்
அற்புதர்
கானான்நாட்டைச் சேரும்வரையிலும்
துணையாய்
வந்தவர் அவர் ஆதரவானவர் - 2
2.அற்பமான
ஆரம்பம் எதையும் அலட்சியம்
செய்யாதவர்
திடமனம், தைரியம்,
பெலன்
தரும் அவரே அதிசயமானவர் - 2
குழவிகள்
அனுப்பி எதிரியைத் துரத்தி
ஜெயத்தை தந்தவர்
அர்ப்பணம்
நித்தம் தொடர்கின்றபோது
உயர்வை
அளிப்பவர் அவர் ஒப்பில்லாதவர் - 2
3.காலங்கள்தோறும்செயல்படும்அவரே
சரித்திர நாயகர்!
வாலிபர்,
அறிவர், மேதைகள் உள்ளம் கொள்ளை
கொள்பவர்
அகண்ட
இப்பூமி முழுதும் வாழ்பவர் இதயம் கவர்ந்தவர்
மா திரளாய்த் தம் சீடர்கள் பெருக்கிடும்
இயேசு
நல்லவர் அவர் என்றும் வல்லவர்
- 2