இயேசு
நாமம் போற்றிப் பாடுவேன்
வாழ்வில்
இயேசுவுக்காய் என்றும் ஜீவிப்பேன்
பாவம்
போக்க பாரினில் வந்தார்
பாவ
சாபம் தன் மேல் சுமந்தார்
நம்
பாவத்திற்காய் ஜீவனை ஈந்தார்
1.கைவிடனே
உன்னை என்றுரைத்தாரே
உள்ளங்கையில்
என்னை வரைந்து வைத்தாரே
கண்மணிபோல்நாளும்பாதுகாப்பாரே
அன்புடன்
என்றும் போற்றிப்பாடுவேன்
2.குயவன்
கைகளில் களிமண்ணைப்போல
குறையேதும்
இன்றி உருவாக்கினீர்
உந்தன்
சித்தம் செய்வதே எந்தன் பாக்கியம்
உம்மை
நம்பிவந்தேன் கிருபைதாருமே
3.மேகமீதில்
நீர் வரும் நாளதிலே
உம்மை
நான் சந்திக்க ஆயத்தமாவேன்
ஆவலோடு
வானிலே தூதர்கள் சூழ
இயேசுவே
நீர் என்னையும் அழைத்துச் செல்வீரே