ஆகாதது எதுவுமில்ல -உம்மால்
ஆகாதது
எதுவுமில்ல
அகிலம்
அனைத்தையும்
வல்லவர்
சர்வ வல்லவர்
நல்லவர்
எப்போதும் நல்லவர்!
1.துதி
செய்யத் தொடங்கியதும்
எதிரிகள்
தங்களுக்குள்
வெட்டுண்டு
மடியச் செய்தீர்
உம்மால்
ஆகும், எல்லாம் ஆகும் (2)
2.அலங்கார
வாசலிலே
அலைந்திட்ட
முடவனன்று
நடந்தானே
இயேசு நாமத்தில்
உம்மால்
ஆகும், எல்லாம் ஆகும் (2)
3.கண்ணீரைக்
கண்டதாலே
கல்லறைக்குச்
சென்றவனை
கரம்
பிடித்துத் தூக்கிவிட்டீர்
உம்மால்
ஆகும், எல்லாம் ஆகும் (2)
4.ஜெப
வீரன் தானியேலை
சிங்கங்களின்
குகையினிலே
சேதமின்றிக்
காப்பான்றினீர்
உம்மால்
ஆகும், எல்லாம் ஆகும் (2)
5.கானாவூரில்
வார்த்தை சொல்ல
கப்பர்நகூம்
சிறுவனங்கே
சுகமானான்
அந்நேரமே
உம்மால்
ஆகும், எல்லாம் ஆகும் (2)