இயேசுவின்
பிள்ளைகள் நாங்கள்
எப்போதும்
மகிழ்ந்திருப்போம்
இயேசுவின்
பிள்ளைகளே எப்போதும் மகிழ்ந்திருங்கள்
1.எந்நேரமும்
எவ்வேளையும்
இயேசுவில் களிகூருவோம்
நம்
நேசரில் களிகூருவோம் (2)
2.எதை
நினைத்தும் கலங்காமல்
இப்போதும்
ஸ்தோத்தரிப்போம்
நாம்
எப்போதும் ஸ்தோத்தரிப்போம்
3.இன்று
காணும் எகிப்தியரை
இனிமேல்
காணமாட்டோம்
நமக்காய்
யுத்தம் செய்வார் – இயேசு
4.நமக்கு
எதிராய் மந்திரம் இல்லை
குறிசொல்லல்
எதுவும் இல்லை
சாத்தான்
நம் காலின் கீழே - இன்று
5.காற்றை
நாம் காணமாட்டோம்
மழையையும்
பார்க்க மாட்டோம்
வாய்க்கால்கள்
நிரப்பப்படும்
6.நினைப்பதற்கும்
வேண்டுவதற்கும்
அதிகமாய்
செய்திடுவார்
அதிசயம்
செய்திடுவார்!