விண்மணி
பொன்மணி வித்தகமணியே
விட்புலம்
பூவிற்கு விழைந்திடுங்கனியே
சொன்மணி
மாலை தொகுத்த நல்மணியே
சோதியாய்
இங்கெழுந்தருள் சூடா மணியே
2.பன்மணி
கோத்தொளிர் பாவலர் மணியே
பாக்கியம்
தருஞ்சீவ காருண்ய மணியே
கண்மணி
பொன்றினோர் கண்மணி யருளக்
கண்டனர்
உரை கேட்டக் கண்ணருள் மணியே
3.மங்கை
சீயோன் மகள் பூண்ட வானணியே
மாசிலார்
உளமதில் ஒளிரும் அம்மணியே
நங்கை
மரிகன்னி ஈன்ற கண்மணியே
நரர்
சுரர் போற்றிடு நாயக மணியே