தேவனைத்
துதிப்பதும்
கீர்த்தனம்
பண்ணுகிறதும் நல்லது
1.எருசலேமைக்
கட்டியே
கரிசனையாய்
காக்கிறார் துரத்துண்ட
இஸ்ரவேலை
கரத்தால் கூட்டிச் சேர்க்கிறார்
2.இதயம்
நொறுங்குண்டோர்களை
இவரே
குணமாக்குகிறார் நொறுங்குண்டோர்
காயங்களை
அருமையாய்க் கட்டுகிறார்
3.நட்சத்திரங்களின்
இலக்கத்தை
அட்சயன்
எண்ணுகிறார் பட்சமாய்
அவைகளை
உச்சரித் தழைக்கிறார்
4.ஆண்டவர்
பெரியவர்
மீண்டும்
பெலமுள்ளவர் அறிவில்
அளவில்லாதவர்
நெறியில் தவறாதவர்
5.சாந்தகுண
முள்ளோர்களை
வேந்தன்
உயர்த்துகிறார் மாந்தரில்
துன்மார்க்கரை
அகாந்தமாய்த் தாழ்த்துகிறார்
6.கர்த்தரையே
பாடுங்கள்
துதியுடன்
கொண்டாடுங்கள்
சுர
மண்டலத்தாலுமே கீர்த்தனம் பண்ணிடுங்கள்