Type Here to Get Search Results !

Tamil Song - 79 - Seeresunaathanukku Jeyamangalam

சீரேசுநாதனுக்கு ஜெயமங்களம்,
ஆதி திரியேக நாதனுக்குச் சுபமங்களம்
பாரேறு நீதனுக்குப் பரம பொற்பாதனுக்கு,
நேரேறு போதனுக்கு, நித்திய   சங்கீதனுக்குச்

1.ஆதி சருவேசனுக்கு ஈசனுக்கு மங்களம்;
அகிலப்பிரகாசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர்மனு வேலனுக்குச்

2.மானாபிமானனுக்கு வானனுக்கு மங்களம்;
வளர்கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நற்தேயனுக்குக், கன்னிமரி சேயனுக்குக்
கோனார்சகாயனுக்குக், கூறுபெத்த லேயனுக்குச்

3.பத்து லட்சணத்தனுக்குச், சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்;
சத்திய விஸ்தாரனுக்குச், சருவாதிகாரனுக்குப்

பக்தர் உபகாரனுக்குப், பரம குமாரனுக்குச்