உம்மைத்
துதிப்பேன்
கர்த்தாதி
கர்த்தாவே
உம்
கிரியைகள்
அதிசயமானதே
உம்மைத்
துதிப்பேன்
தேவாதி தேவனே
உம்
ஆலோசனைகள் அருமையானதே
1.என்னை
ஆராய்ந்து அறிந்து இருக்கிறீர்
என் நினைவுகளையும் தூரத்தில்
அறிவீர்
எந்தன் நாவிலேசொல் பிறவா
முன்னமே
எந்தன்
தேவனே அவை யாவும் அறிவீர்
2.உமக்கு
மறைவாய் இருளும் மூடாதே
இரவும்
பகலைப் போல் வெளிச்ச மாகுமே
உமது
கரத்தை என் மேல் வைக்கிறீர்
இந்த
அறிவு ஆச்சரியமானதே
3.என்னைச்
சோதித்து அறிந்து கொள்ளுமே
வேதனை
வழி என்னின்று
அகல
நித்திய வழி என்னை நடத்துமே
எந்தையே
எந்தன் உள்ளம் பாடிட