இயேசுவின் நாமமே!
கிறிஸ்தேசுவின் நாமமே! (2)
வானம் பூமிதனில்
மகிமையோடிறங்கும் உன்னதர் நாமமே! (2)
அல்லேலூயா (8)
1.மாந்தர் போற்றும் நாமம் - விண்
தூதர் வாழ்த்தும் நாமம் (2)
பூவுலகோர் போற்றும்
மேன்மையான நாமம் (2)
2.பாவம் போக்கும் நாமம் - தூய
வாழ்வளிக்கும் நாமம் (2)
நித்திய ஜீவனருளும்
ஈடில்லாத நாமம் (2)
3.பேய் நடுங்கும் நாமம் - கடும்
நோய் அகற்றும் நாமம் (2)
நேற்றும் இன்றும் என்றும்
மாறிடாத நாமம் (2)