Pirana Piriyan Tamil Songs Lyrics
பிராண பிரியன் இயேசு நாதா
ஜீவன் தந்த சிநேகமே
நஷ்டமாகி போன என்னை
இஷ்டமாக்கி கொண்ட நாதா
எந்தன் சிநேகம் உமக்கு மாத்திரம்
வேறு யாரும் கவர முடியா
எனதெல்லாம் உமக்கு மாத்திரம்
என்னை முற்றும் தருகிறேன் (2)
1.தள்ளப்பட்ட என்னை உந்தன்
பிள்ளையாக மாற்றினீரே
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை முற்றும் கழுவினீரே
2. எந்தன் செல்வம் மேன்மையெல்லாம்
உந்தன் மகிமைக்காக மாத்திரம்
லோக சிநேகம் எனக்கு வேண்டாம்
ஜீவிப்பேன் நான் உமக்காய் மாத்திரம்